தமிழ் புத்தாண்டு நந்தன ஆண்டு விடிந்தது. அத்தோடு கூட பல ஆண்டுகளாக அழைத்து ஓய்ந்துபோன நண்பர் டாக்டர் சு.முத்துசுவாமி தம்பதியினர், "இம்முறை நீங்க வர்றீங்க," என்று அன்பு கட்டளை போடவே, மறுக்காமல் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சென்று முக்கிய உரை ஆற்றிவிட்டு வந்தேன்.
தமிழ் மொழி, கலாச்சாரம், பற்றி பேசினாலும், குழந்தைகளும் அவர்களின் வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன்.
நல்ல வரவேற்பு இருந்தது. பேச்சு முடிந்தவுடன், நிறைய பேருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. நிறைய பெற்றோர்களுக்கு நான் பேசியது கட்டி இழுத்துப்போட்டதாக சொன்னார்கள். கூர்ந்து அவர்களின் கருத்தினை கவனித்து கேட்டேன்.
புளோரிடா தலைநகர் தலஹாசியில், Florida State University அரங்கத்தில், ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் நான் பேசியதில் இருந்து ஒரு சிறிய 6-நிமிட வீடியோ இது. நன்றி நண்பர் ஜெய் அவர்களுக்கும், டாக்டர் முத்துசுவாமி குடும்பத்தினருக்கும், தலஹாசி தமிழ் அன்பர்களுக்கும்.
No comments:
Post a Comment