Monday, April 23, 2012

பட்டினத்தார் பாடலைக் கேளுங்கள்

இரவு நேர பாடலாய் வந்து உதிர்ந்த இப்பட்டினத்தார் பாடல், மனதை கவர்ந்தது.Saturday, April 14, 2012

A Segment of My Speech in Florida for Tamil New Year's Day 2012தமிழ் புத்தாண்டு நந்தன ஆண்டு விடிந்தது. அத்தோடு கூட பல ஆண்டுகளாக அழைத்து ஓய்ந்துபோன நண்பர் டாக்டர் சு.முத்துசுவாமி தம்பதியினர், "இம்முறை நீங்க வர்றீங்க," என்று அன்பு கட்டளை போடவே, மறுக்காமல் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சென்று முக்கிய உரை ஆற்றிவிட்டு வந்தேன்.

தமிழ் மொழி, கலாச்சாரம், பற்றி பேசினாலும், குழந்தைகளும் அவர்களின் வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன்.

நல்ல வரவேற்பு இருந்தது. பேச்சு முடிந்தவுடன், நிறைய பேருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. நிறைய பெற்றோர்களுக்கு நான் பேசியது கட்டி இழுத்துப்போட்டதாக சொன்னார்கள். கூர்ந்து அவர்களின் கருத்தினை கவனித்து கேட்டேன்.

புளோரிடா தலைநகர் தலஹாசியில், Florida State University அரங்கத்தில், ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் நான் பேசியதில் இருந்து ஒரு சிறிய 6-நிமிட வீடியோ இது. நன்றி நண்பர் ஜெய் அவர்களுக்கும், டாக்டர் முத்துசுவாமி குடும்பத்தினருக்கும், தலஹாசி தமிழ் அன்பர்களுக்கும்.

புளோரிடாவில் தமிழ் புத்தாண்டு விழா 2012

சித்திரை திருநாள் 2012, புளோரிடா மாநில தலைநகரமான தலஹாசியில், புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் வந்திருந்த மக்களின் ஒரு பகுதி.

புளோரிடாவில், அதுவும் தலஹாசியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழன்பர்களின் மதிப்பிற்குரிய டாக்டர். சு. முத்துசுவாமி, மேடையில் உரையாற்றும் போது எடுத்தது. இவர் அண்ணா பல்கலைகழகத்திலும், மயாமி பல்கலைகழகத்திலும் பொறியியல் பட்டங்கள் பெற்றவர். என் நீண்ட கால நண்பர்.
செம்மறியாட்டுக்குட்டியும், அன்பொழுகும் தமிழ்ப்புலியும் - Twitter குட்டிக்கதை By @RexArul

சென்ற எனது சிறு முன்னுரையில் திடீரென்று ஒரு சிறு கதையை Twitterல் எழுதும் நிலை எப்படி உருவானது என்பதை சொன்னேன். இக்கதை நிறைய பேரை பாதித்தது என்று என்னிடம் சொன்னவர்கள், குழந்தையின் இழிநிலையை சூசகமாக இக்கதை விவரிப்பதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் கூறினார்கள்.

யாருடைய மனதும் பாதிக்கப்படவேண்டும் என்று இதை நான் எழுதவில்லை. முழுதும் படித்தவுடன், இக்கதை உங்களை சிந்திக்க வைக்குமானால், அதுவே இப்போதைக்கு போதும். சிறுகதை இதோ கீழே. (Also as curated by @MayilSK: http://www.twitlonger.com/show/gv48sq)
Friday, April 13, 2012

கதை ஒன்று, என்னை மீறி உருவான கதை.

 Twitter-ல் அருமை நண்பர் ஒருவர் விளையாட்டாகவோ, உண்மையாகவோ பாராட்டினார். சில Tweetகளை பற்றி அவர் வினவ, அதற்கு என்னுடைய வெளிப்படையான விடையை பகிர்ந்தேன்.

நாட்டில் அநியாயங்களும், அக்கிரமங்களும் தங்குதடையின்றி நடக்க ஒரு காரணம், நியாயத்தோடும், நீதிநெறியோடும் இருப்பவர்கள், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பதால் தான் என்பதை ஆங்கிலத்தில் chutzpah என்பார்களே, அதை விவரிப்பது போல ஒரு உதாரணத்தை கொடுத்தேன். என்றாலும், எனக்கு அவ்வளவு திருப்தியில்லை.

கதை சொல்லலாம் என்றால், Twitter-ல் போய் என்ன பெரிய கதை சொல்லிடமுடியும் என்று தோன்றியது. என்றாலும் மனதில் ஓடும் எண்ணங்களின் உண்மைகளை விவரிக்க ஊடகம் ஒரு இடைக்கல்லே அல்ல.

சற்றும் எனக்கு தமிழில் அச்சிட பிடிக்காத iPhoneல் ஆரம்பித்தேன். கைகளில் கதை தானாக வந்து விழுந்தது. கதை அடுத்த பதிவில். அதற்கு முன்னோட்டமாக இருந்த Tweetகள் இதோ.